Sunday, 24 March 2019

காலையில எழுந்திருச்சதும் உள்ளங்கையைப் பார்க்க சொல்வதற்கு காரணம் என்ன தெரியுமா?

கடவுளின் அருள் கிடைக்கும் என்றால் யாருக்கு தான் ஆசை இருக்காது. நாம் வாழ்கின்ற வாழ்க்கைக்கு அர்த்தம் புரிய வேண்டும் என்றால் அது கடவுளோடு நாம் சேர்ந்து பயணிப்பதால் மட்டுமே முடியும். இந்த உலகத்தையே உருவாக்கி வழிநடத்தும் ஒரு மாபெரும் சக்தி என்றால் அவர் நம் கடவுள் தான். அப்படி சர்வ வல்லமை படைத்த கடவுளிடம் நெருங்குவது என்பது சாதாரண விஷயம் கிடையாது. நாம் அவரை தினமும் வணங்கலாம், மலர்களால் அர்ச்சிக்கலாம், அவரை நினைத்து மந்திரம் ஓதலாம் இப்படி அவரின் ஆசிர்வாதத்தை பெற தினமும் நாமும் முயற்சி செய்து கொண்டு தான் இருக்கிறோம்.ஆன்மீகச் சக்தி


உலகத்தையே ஒற்றை சொல்லால் இயக்கி வரும் கடவுளின் முழு அருளையும் சக்தியையும் பெற நாங்கள் சில வழிமுறைகளை இங்கே கூறயுள்ளோம்.
அவரின் இதயத்தில் இடம் பிடிக்க நாமும் தினமும் விரதம் கூட இருந்து தான் பார்க்கிறோம். உண்மையான அவரின் நம்பிக்கைக்கு பாத்திரமான பக்தர்கள் எப்பொழுதும் அதிர்ஷ்டக்காரர்கள். கண்டிப்பாக அவர்களால் அவரின் அருகில் செல்ல இயலும்.
நமது புராண இந்து மத இலக்கியங்களின் படி இந்த மாதிரியான வழிமுறைகளை நீங்கள் தினமும் மேற்கொண்டு வந்தால் கண்டிப்பாக நீங்கள் கடவுளின் நெருங்கிய நபர் ஆகிவிடுவீர்கள். அவரின் முழு ஆசிர்வாதமும், பாசமும், அன்பும் மகிமையும் உங்களுக்கு எப்பொழுதும் வரும் என்பதில் சிறுதளவும் ஐயமில்லை என்றே கூறலாம்.

சூரிய பகவான்


இந்த உலகத்தில் புழுவிலிருத்து மனிதன் வரை கோடிக்கணக்காண உயிர்கள் வாழ ஏற்ற சூழ்நிலையை உருவாக்கி அவைகளுக்கு தேவையான நிலம், நீர், ஆகாயம் என்ற ஐந்து பூ தங்களையும் படைத்த வல்லமை பெற்ற மாபெரும் சக்தி சூரியன். இவர் தன் பக்தர்களின் பரிபூரண அன்பிற்கு பாத்தியப்பட்டவர். தன் பக்தர்களுக்கு சமுதாயத்தில் நல்ல மதிப்பையும் மரியாதையையும் நிலை நிறுத்துபவர். அவர்களின் எதிரிகளை வீழ்த்து வெற்றி காற்றை சுவாசிக்க வைப்பவர். இவரின் அருளால் நீண்ட ஆரோக்கியமும் நீண்ட ஆயுளும் கிட்டும்.

தண்ணீர் படைத்தல்

சூரிய பகவான் தான் நாம் இந்த பரந்த உலகத்தை கண் கொண்டு பார்க்க உதவுகிறார். கொஞ்சம் யோசித்து பாருங்கள் சூரியன் உதிக்கவில்லை என்றால் என்னவாகும் இந்த உலகமே இருண்டு விடும். கண்ணிருந்தும் நம்மால் இந்த உலகத்தையே காண இயலாது. அப்பேற்பட்ட பெருமைக்கு பாத்தியப்பட்டவர். எனவே நமது கண்களை தினமும் பாதுகாக்கும் மாபெரும் கடவுள். இவரின் அருளை பெற நாம் தினமும் விரதம், தானம் செய்யக் கூட வேண்டாம். நாம் உயிர் வாழக் காரணமாக இருக்கும் அவருக்கு தினமும் நீரை படைத்தாலே போதும் அவரின் ஒட்டுமொத்த அன்பையும் பெற்று அவரின் அருகில் சென்று விடலாம்.

கும்பம்

தினமும் சூரிய உதயத்தின் போது ஒரு காப்பர் பாத்திரத்தில் சிறுதளவு தண்ணீர் வைத்தாலே போதும். அதனுடன் வெல்லம், அரிசி, குங்குமம் மற்றும் சிவப்பு நிற மலர்கள் இவற்றை படைத்து வணங்கி வந்தால் அண்ட சமாச்சாரங்களை ஆளும் அவரின் அருளால் நீடுழி வாழ்வீர்கள்.

பசுவிற்கு உணவு

இவ்பூவுலகில் பிறந்த அனைத்து உயிர்களும் கடவுளின் ஒரு அங்கம் என்றே கூறப்படுகிறது. நம்மிடம் இருப்பதை இல்லாத ஒரு ஏழைக்கு கொடுத்தாலே போதும் அது கடவுளுக்கு செய்யும் சேவையாக கருதப்படுகிறது. இந்து மதத்தை பொருத்த வரை தியாகத்தின் மறு வடிவம் என்றால் அது பசுவின் வாழ்க்கை தான். அதனால் பசுவை கடவுளுக்கு நிகராக வைத்து நாம் வழிபடுகிறோம்.
கிட்டத்தட்ட 36 கோடி தெய்வங்களை பற்றி இந்து புராணம் கூறுகிறது. அந்த 36 கோடி தெய்வங்களும் அடங்கி இருக்கும் ஒரே உயிரினம் பசு தான் என்றும் நமது இந்து மதம் பசுவின் பெருமையை பறைசாற்றுகின்றன. கடவுள் கிருஷ்ணனுக்கு மிகவும் பிடித்தமானது கூட பசு மாடு தான். எனவே அவரின் அருளை பெற நீங்கள் பசுவை வணங்கினாலே போதும்.
அளிக்கும் முறை
பசுவிற்கு உணவளித்தல் என்பது இந்து மதத்தில் பெரிய புண்ணியம் என்று கூறியுள்ளார்கள். ஆனால் இந்த காலங்களில் மக்கள் இதை தவறாக புரிந்து கொண்டு பழைய உணவுகள், மீந்து போன உணவுகளை படைக்கின்றனர். இதனால் உங்களுக்கு பாவம் தான் வந்து சேருமே தவிர புண்ணியம் கிடைக்காது. ஒரு உயிருக்கு உணவளித்தல் என்பது நாம் சாப்பிடுவதை பகிர்ந்தளித்தல் என்பதை நாம் மறந்து வருகிறோம். எதையாவது தானம் செய்வோம் என்பதை விட ஒரு உயிரின் தேவையை அறிந்து உதவுவோம். அப்போ கண்டிப்பாக கடவுள் வெகு தொலைவில் இருக்க மாட்டார். நம்முடனே பயணிப்பார் என்று இந்து மதம் கூறுகிறது.

பூஜை அறை சுத்தம்

சுத்தம் சுகம் தரும் என்பார்கள். சுத்தம் சுகத்தை மட்டுமல்ல கடவுளின் அருளையும் சேர்த்து தரும் என்பதை மறவாதீர்கள். அதிலும் கடவுள் வசிக்கும் இடமான பூஜை அறையை எப்பொழுதும் சுத்தமாக பேணுவது மிகவும் முக்கியம். அப்பொழுது தான் உங்கள் வீட்டில் லட்சுமி தேவி குடிகொள்வாள்.
சுத்தம் செய்யும் முறை
உங்கள் பூஜை அறையை முதலில் நன்றாக துடைத்து தூசி இல்லாமல் பொருட்களை எல்லாம் அடுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். எக்காரணம் கொண்டும் சுத்தம் செய்ய துடைப்பம் பயன்படுத்தக் கூடாது. வாக்யூம் க்ளீனர் அல்லது ஒரு சுத்தமான துணியை கொண்டு துடைத்து எடுக்கவும்.

லட்சுமி, சரஸ்வதிகடவுளின் பாதியான சரஸ்வதி தேவி மற்றும் லட்சுமி தேவி நமது உள்ளங்கைகளில் வசிப்பதாக இந்து புராணம் கூறுகிறது. எனவே காலையில் எழுந்ததும் நம் உள்ளங்கைகளை கண்களில் வைத்து ஒத்திக் கொள்வது கடவுளின் அருளையும் தேவிகளின் அருளையும் கிடைக்கச் செய்யும்.
இந்த முறைகளை தினமும் மேற்கொண்டு அடுத்தவர்களை துன்புறுத்தாமல் எல்லா உயிர்களிடத்தும் அன்புடன் இன்புற்று பிணைந்து வாழ்ந்து வந்தால் கண்டிப்பாக தினமும் கடவுள் தன் தோள்களில் நம்மை சுமந்து நடப்பார். நமக்காக ஒரு இடம் கடவுளின் அருகில் இருக்கும்.

Saturday, 24 November 2018

உருவ வழிபாடு
பூசை எப்போதும் உருவத்திற்குத்தான் நடக்கிறது. மனிதனின் இயல்பு பூசை செய்வது. இதை அறியாமலேயே பல கோட்பாடுகள் மிகவும் உற்சாகத்தோடு உருவ வழிபாட்டை கண்டனம் செய்கின்றன. மனிதன் பூசை செய்யாமல் தடுப்பதற்கு அவனை சிரத்தை, மதிப்பு, தானம் முதலிய நற்பண்புகளிலிருந்து வஞ்சிப்பது என்று பொருள். ஏனென்றால், பூசையின் மூலமே இப்பண்புகள் பெருகுகின்றன.

உருவமற்ற பொருளை பூசிப்பது இயலாதது. சாதுக்கள், பெரியோர்கள் முதலிய வணக்கத்துக்குரியவர்களுக்கு பூசை செய்யப்படுகிறது (வணங்கி வாழத்தப்படுகிறது) என்றால் அவர்களுடைய படம், உருவச்சிலைக்கு இல்லாமல் அவரது உடலுக்கு செய்யப்படுகிறது என்கிறார்கள். உடல் உருவமில்லையா? சரீரம் உயிருள்ளதா அல்லது உடம்பில் உரையும் இந்த ஜீவன் உயிருள்ளதா? உடலில் உள்ள இந்த ஜீவனை பூசை செய்வது எப்படி நிகழும்? அது பூசைக்காக எங்கே கிடைக்கும்? பூசை உடலுக்குத்தான் நடக்கும், உடல் ஐம்பூதங்களாலான உருவம்.

உடலில் உள்ள உயிர் உடலுக்கு செய்யப்படும் பூசை, மரியாதைகளை தன்னுடையதாக எண்ணி அதனால் மகிழ்கிறது. இது உண்மை. ஆனால், எங்கும் வியாபித்திருக்கும் இறை விக்கிரக உருவத்தில் இருக்கிறதா இல்லையா? அது எல்லாம் அறிந்ததா அல்லது இல்லையா? சரீரத்தில் குடியிருக்கும் இந்த மனம், உடலுக்கு பூசை செய்பவன் எலும்பு, மாமிசம் முதலியவற்றிற்கு பூசை செய்யவில்லை, என்னையே பூசிக்கிறான் என்று நினைப்பது போல சர்வ-வியாபித்திருப்பவனும் விக்கிரக உருவிலும் இருப்பவன். பூசை செய்பவன் தன்னைத்தான் பூசித்துக்கொண்டிருக்கிறான், கல்லையோ மரத்தையோ பூசிக்கவில்லை என்பதை அறியமாட்டானா?

உயிருக்கே பூசை நடக்கிறது. ஜடத்திற்கு அல்ல. ஆனால், உருவத்தை மீடியமாக வைத்துக்கொள்ளாமல் உயிரை பூசிப்பது நிகழவே முடியாது. எங்கும் நிறைந்தவன், சர்வேசுவரன், எல்லாம் அறிந்தவனின் பூசை விக்கிரத்தின் மூலமாகச் செய்யாமல், சாதுக்கள், பெரியோர்களின் உடலின் மூலமாக செய்வதில் ஒரு குற்றம் நிகழ்கிறது. அந்த (சாது, பெரியோர்களின்) உயிர் சரீரத்தின் பூசையை தன்னுடைய பூசையாக எண்ணி ஏற்றுக்கொள்கிறது. பூசை செய்பவனுடைய பார்வையும் அந்த உடலிடமே இருந்து விடலாம்; இருந்து விடுகிறது. கல், மரம் முதலிய விக்கிரகங்களின் மீடியத்தின் மூலம் பூசை செய்தால் பூசை செய்பவனுடைய பார்வையில் கல், மரம் முதலியவை இருப்பதில்லை. எந்த உயிரும் இருப்பதில்லை. அவன் நேராக ஈசனையே, ஆராதனைக்குரியவனையே பூசிக்கிறான். அவனுடைய பூசையை இடையில் தன்னுடையதாக கருதும் ஜீவன் ஏதும் அங்கு இல்லை. ஆகவே அந்த பூசை நேராக ஈசனையே அடைகிறது.

“ந தஸ்ய ப்ரதிமா அஸ்தி” (சுக்ல யஜூர்வேதம் 32-2) என்கிறது வேதம். “அதற்கு உருவமில்லை” என்பது பொருள். ஏனெனில் ஆராதனைக்குறிய ஏதேனும் திருவுருவம் இருந்திருந்தால் அதை நேருக்கு நேர் காணாமல் எந்த விக்கிரமும் அமைய முடியாது. அவனும் வேறு மூர்த்தியை தன்னுடையதாக ஏற்பதில்லை. அப்போது பூசையே நாசமாகிவிடும். அவனுக்கு எந்த உருவமும் இல்லை. ஆகையினாலேயே எந்த விக்கிரகமும் அவனுடைய பூசைக்கு வழியாக முடிகிறது. 

அவன் எல்லா திருவுருவங்களிலும் இருக்கிறான். எல்லாம் அறிந்தவனாக இருப்பதால் தனக்கே பூசை நடக்கிறது என்பதையும் அறிகிறான். உயிருக்கு பூசையின் பேறு கிடையாது. பூசையின் அறிவு இருக்கிறது. அந்த அறிவே அவனை திருப்தி செய்கிறது. நீங்கள் மரியாதைக்குறியவரை பூசை செய்யும்போது (வணங்கி வாழ்த்தும்போது) பூசைப்பொருட்கள் எல்லாம் அவரது உடலுக்கு, ஐம்பூத உருவத்திற்கே கிடைக்கின்றன. அவரது உயிருக்கு (மனம், ஜீவன்) தனது பூசையின் அறிவு மட்டும்தான் கிடைக்கிறது. அந்த அறிவே அவரை திருப்திப்படைய செய்கிறது.

ஏன் பூசை செய்யவேண்டும்? செயல் இல்லாமலோ, பொருட்களை அர்ப்பணிக்காமலோ, பாவனை பரிபக்குவம் அடையாது. அதனால் பூசை செய்யப்பட வேண்டும். நமது வாழ்வில் பொருளின் தேவையும், செயலின் பெருமையும் ஒன்றுக்கொன்று பொருந்தியுள்ளன. அதனால், நாம் பொருளை அர்ப்பணிக்காமலோ, செயல் செய்யாமலோ இருக்கும்போது நம் மனதில் பாவனையும் சரியாக அமைவதில்லை. தன் ஈடுபாட்டை வெளிப்படுத்தவும், பாவனையை வெளிக்காட்டி அதை திடப்படுத்தவும், பொருட்களை அர்ப்பணிப்பதும், செயல் மூலம் சேவை செய்வதும் வழியாகும்.

வாழ்வில் செயலின் பெருமையும், பொருளின் தேவையும் முடிந்துவிட்டவனே பொருள், செயல் இன்றி மானசீக பூசைக்கு உரிமையுடையவன். இல்லாவிட்டால் மானசீக பாவனை மட்டுமே மிகவும் துல்லியமாக இருக்கும்; மனதில் அதன் நெருக்கம் இருக்காது. நீங்கள் உங்களுக்காக பொருட்களை விரும்பிச்சேர்க்கிறீர்கள். வேலையே மற்றவர் மூலம் செய்ய விரும்புகிறீர்கள். உங்களுக்கு விருப்பம் பொருளில், செயலில் இருக்கிறது. இனி அந்த விருப்பு பரமாத்மாவிடம், தேவனிடம், குருவிடம், சாதுக்களிடம் எந்த மீடியத்தின் மூலம் எழப்போகிறது? உங்களுக்கு விருப்பமான பொருட்கள், சரீரத்துக்கு சேவை தருமானால், விருப்பு அங்கு செல்லும், கற்பனையால் மட்டுமே செல்லாது.

இதுவே பூசையின் ரகசியம். இதை அறியாமல் பூசையை இகழ்பவர்கள் பரிதாபத்துக்குறியவர்கள். இதை அறியாமல் மூட பூசை செய்பவர்கள் கண்டனத்துக்கு உறியவர்கள்.

Monday, 12 November 2018

சிவபெருமானும், அர்ஜுனனும் ஏன் போரில் ஈடுபட்டார்கள் தெரியுமா?

இந்தியாவின் ஆகச்சிறந்த நூல்களில் ஒன்று மகாபாரதம் ஆகும். அதன் சிறப்புகளால்தான் அது இதிகாசமாக மாறி இருக்கிறது. இந்துக்களின் மிகஉயரிய புனித நூலாக மகாபாரதம் கருதப்படுகிறது. பாண்டவர்கள் மற்றும் கௌரவர்களுக்கு இடையில் ராஜ்ஜியத்திற்காக பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தலைமையில் நடைபெற்ற போரே மகாபாரதம் ஆகும். இதில் பல சூழ்ச்சிகள் மற்றும் போராட்டங்களுக்கு பிறகு பாண்டவர்கள் வெற்றிபெற்றனர்.பாண்டவர்களின் வெற்றிக்கு கிருஷ்ணருடைய புத்திகூர்மை எப்படி முக்கிய காரணமாக இருந்ததோ அதே அளவிற்கு மற்றொரு முக்கிய காரணம் அர்ஜுனனின் வீரம் ஆகும். காண்டீவதாரியான அர்ஜுனனை வெல்வோர் மூவுலகத்திலும் இல்லை என்று கூறுவார்கள். ஆனால் அர்ஜுனனை தோற்கடித்தவர்களும் மகாபாரதத்தில் உண்டு. யாரெல்லாம் அர்ஜுனனை தோற்கடித்தித்திருக்கிறார்கள் என்றும் மேலும் அர்ஜுனன் பற்றி தெரியாத தகல்வல்களையும் பார்க்கலாம்

கிருஷ்ணரின் உறவுகிருஷ்ணரும், அர்ஜுனனும் உறவினர்கள் ஆவர். குருஷேத்திர போரில் மட்டுமின்றி பல சூழ்நிலைகளில் அர்ஜுனனின் உயிரை கிருஷ்ணரே காப்பாற்றினார். கிருஷ்ணர் மட்டும் இல்லையெனில் அர்ஜுனன் எப்பொழுதோ கொல்லப்பட்டிருப்பார். பாண்டவர்களில் அர்ஜுனனே கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்தவராவார் அதனால்தான் தன் சகோதரி சுபத்ரையை அர்ஜுனனுக்கு மணம் முடித்து வைத்தார்.

அர்ஜுனன் - காதல் மன்னன்அர்ஜுனன் பெண்களின் கனவு கண்ணனாகவும், காதல் மன்னனாகவும் இருந்தார். அர்ஜுனனுடைய வசீகரமான தோற்றமும், வீரமும் அர்ஜுனன் மீது அனைவரும் காதலில் விழ காரணமாக அமைந்தது. அர்ஜுனனை திருமணம் செய்து கொள்ள பல பெண்களும், இளவரசிகளும் தவமிருந்தனர். ஆனால் அதில் திரௌபதி, உலூபி, சித்ராங்கதா மற்றும் சுபத்ரை ஆகியோர்க்கு மட்டுமே அந்த பாக்கியம் கிடைத்தது.

அர்ஜுனனின் மறைமுக திறமை

அர்ஜுனனின் வில்லாற்றலையும், வீரத்தையும் உலகமே அறியும். ஆனால் பலரும் அறியாத அர்ஜுனனின் மறைமுக திறமை என்னவெனில் இசையும், நடனமும். அர்ஜுனன் வீணை வாசிப்பதில் இராவணனுக்கு இணையானவன் என்று பலரும் கூறுவார்கள். அதேபோல அவனின் நடன திறமை அர்ஜுனின் அஞ்ஞாதவாசத்தில் உதவியாய் இருந்தது. உத்திரைக்கு நடனம் கற்றுத்தரும் வேலையைதான் தன் அஞ்ஞாதவாசத்தில் செய்துவந்தான். அர்ஜுனனின் நடனம் காண்பவர்களை இமைகொட்டமால் பார்க்கச்செய்யும் என்று குறிப்புகள் உள்ளது.

ஏகலைவன்அர்ஜுனன் செய்த மிகப்பெரிய பாவங்களில் ஒன்றாக கருதப்படுவது ஏகலைவனின் விரலை வெட்டியதாகும். அர்ஜுனன் நேரடியாக அதனை செய்யாவிட்டாலும் அந்த கொடுஞ்செயல் அர்ஜுனனை காரணமாக கொண்டே செய்யப்பட்டது. ஏகலைவனின் விரலை துரோணாச்சாரியார் ஏகலைவனின் விரலை கேட்க காரணம் அவன் அர்ஜுனனை விட வில்லாற்றாலில் சிறந்து விளங்கிவிடுவானோ என்ற அச்சம்தான். ஒருவேளை ஏகலைவனின் விரல் துண்டிக்கமால் இருந்தால் அர்ஜுனனை வெற்றிபெறக்கூடியவராக ஏகலைவன் இருந்திருப்பார்.

கர்ணன்


அர்ஜுனனின் மூத்த சகோதரனான கர்ணன் தன் இறுதிமூச்சு வரை அர்ஜுனனை வீழ்த்துவதையே தன் வாழ்நாள் இலட்சியமாக கொண்டிருந்தார். அதற்கான வீரத்தையும், ஞானத்தையும் கூட கர்ணன் பெற்றிருந்தார். ஆனால் கிருஷ்ணர் உடன் இருந்ததால் அர்ஜுனனின் கை மேலோங்கிவிட்டது. வீரத்திலும், தானத்திலும் கர்ணனை மிஞ்ச யாருமில்லை என்று கிருஷ்ணரே அர்ஜுனனிடம் கூறியிருக்கிறார். கிருஷ்ணரின் துணையும், கர்ணணின் சாபங்களும் இல்லையெனில் நிச்சயம் குருஷேத்ர போரின் முடிவு வேறாக இருந்திருக்கும்.

அனுமன்பலரும் அர்ஜுனனை வெல்ல கூடிய திறமை இருந்தாலும் அவர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் ஆஞ்சநேயருக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. அர்ஜுனன் வனத்திற்குள் சென்ற போது அங்கிருந்த வானரத்திடம் தான் இராமரை விட வில்லாற்றலில் சிறந்தவர் என்றும் வானரங்களின் துணை இல்லாமலேயே தன்னால் உறுதியான பாலத்தை அமைக்க முடியும் என்று சவால் விட்டார். அதை ஒப்புக்கொள்ளாத ஆஞ்சநேயரிடம் ஒருவேளை தான் இந்த சவாலில் தோற்றுவிட்டால் அங்கேயே தீக்குளிப்பதாக கூறினான். தான் காண்டீவத்தை கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் பாலத்தை அமைத்தான் அர்ஜுனன். ஆனால் ஆஞ்சநேயர் நொடியில் அந்த பாலத்தை உடைத்தார். தன் தோல்வியை ஒப்புக்கொண்ட அர்ஜுனன் உடனே தீ மூட்டி தன் உயிரை விட துணிந்தான். ஆனால் அந்த சமயத்திலும் அர்ஜுனனை காப்பாற்றியது கிருஷ்ணர்தான்.

சிவபெருமான்அர்ஜுனனை போர்புரிந்து தோற்கடித்த ஒருவர் உண்டெனில் அது சிவபெருமான்தான். வனவாசத்தில் இருந்த அர்ஜுனனிடம் பாசுபத அஸ்திரத்தை சிவபெருமானிடம் இருந்து பெற்றுவரும்படி அனுப்பி வைத்தார் கிருஷ்ணர். அர்ஜுனனும் இமயத்திற்கு சென்று சிவபெருமானை நோக்கி கடும் தவத்தில் ஈடுபட்டார், அர்ஜுனனின் வீரத்தை சோதிக்க வேடன் உருவெடுத்து அவனை சோதிக்க எண்ணினார் சிவபெருமான்

சிவபெருமானுடன் போர்ஒரு பன்றியை நோக்கி அர்ஜுனன் அம்பு விட அதேசமயம் வேடனும் அம்பு விட பன்றி இறந்தது. ஆனால் யார் எய்த அம்பினால் பன்றி இருந்தது என்பதில் சிவபெருமானுக்கும், அர்ஜுனனுக்கும் இடையில் வாக்குவாதம் எழுந்தது. இறுதியில் இருவரும் வாள் சண்டையிட்டு முடிவை அறிந்து கொள்ளலாம் என்று முடிவெடுக்கப்பட்டது. இருவரும் வாள் போரை தொடங்கினர், இருவரின் வீரமும் அளப்பரியதாக இருந்தது. ஆனால் எவ்வளவுதான் முயற்சித்தும் அர்ஜுனனால் சிவபெருமானை வீழ்த்த இயலவில்லை. இறுதியில் அர்ஜுனன் வீழ்த்தப்பட்டான். தன்னை வீழ்த்தியது யார் என்பதை உணர்ந்த அர்ஜுனன் சிவபெருமானின் கால்களில் வீழ்ந்தான். அர்ஜுனனை ஆசீர்வதித்த சிவன் அவனின் வீரத்தை பாராட்டி பாசுபத அஸ்திரத்திற்கான ஞானத்தை வழங்கினார். இந்த பாசுபத அஸ்திரத்தை கொண்டுதான் பின்னாளில் அர்ஜுனன் ஜயத்ரதனை வதைத்தான்.

Sunday, 13 May 2018

கோலம் போடுவது எதற்கு? இதற்கு பின் மறைந்துள்ள ரகசியம் என்ன?

ஏன் கோலம் போட வேண்டும்?
 
 வீடுகளில் கோலம் போடுகிறோம். இவை சாஸ்திரங்கள் நமக்காக உருவாக்கிக் கொடுத்த வழிமுறை. ஆனால் கோலம் எதற்காகப் போடுகிறார்கள்? பல புள்ளிகளை வைத்து இணைத்துப் பார்ப்பது ஏன்? 
 
🌟 இதற்கு பின் உள்ள அறிவியல் காரணம் தான் என்ன? கோலப்பொடி தயாரிக்கப் பயன்படும் கற்கள் காந்தப் புலன்கள் கொண்டது. காந்தப் புலன்கள் கொண்ட, கோலப்பொடியைக் கொண்டு கோலமிடும் பொழுது, நாம் எண்ணுகின்ற உணர்வுகள், கோலப் பொடியில் கலந்து விடுகின்றது.
 
🌟 வீட்டில் உள்ள பெண்கள் மகிழ்ச்சி, வெறுப்பு, கஷ்டம் என பல மனநிலைகளில் இருப்பார்கள். இதில் வெறுப்பு என்பது மட்டும் வீட்டில் இருக்கவே கூடாது. 
 
🌟 அப்படி வெறுப்பு இருந்தால் வீட்டில் இருக்கும் அனைவரின் மகிழ்ச்சியையும் சீர்குலைந்து விடும். ஆக, இந்த வெறுப்பின் உணர்வுடன், கோலப்பொடியைக் கையில் எடுத்தோம் என்றால், அதிலிருக்கும் காந்த சக்தி நமது வெறுப்பு உணர்வை கவர்ந்து கொள்ளும்.
 
🌟 இந்த உணர்வுடன் கோலமிடத் தொடங்கினால், என்னாகும்? அது நேர்த்தியாக வராது. அழித்து அழித்துக் கோலம் போட்டுக் கொண்டிருப்பார்கள். ஆனால் சந்தோசமாக இருப்பவர்கள், ஒரு புள்ளியை வைத்தால், தொடர்ந்து அழகாகக் கோடு இழுத்துக் கொண்டே போவார்கள்.
 
🌟 ஆக, இதையெல்லாம் மாற்றியமைப்பதற்காக தன் குடும்பத்தின் மீது பற்றும், பாசமும் கொள்ளும் பொழுது, மகிழ்ச்சியான உணர்வின் தன்மையை உருவாக்கும் ஆற்றல் வருகின்றது.
 
🌟 குடும்பத்தில் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். ஒன்று சேர்ந்து வாழவேண்டும் என்று எண்ணி கோலப் பொடியை எடுத்து, புள்ளிகளை வைத்துக் கோலமிடும் பொழுது, நம்முடைய நிலைகளும் ஒன்றுபடும் தன்மை வருகின்றது.
 
🌟 நமக்குள் வேற்றுமை இல்லாத நிலைகள் கொண்டு, அனைவரையும் அரவணைக்கும் தன்மை வர வேண்டுமென்ற எண்ணத்தால், நமது குடும்பத்தின் மீது பற்றும், பாசமும் வரவேண்டும். இணைந்து வாழும் சக்தி பெறவேண்டும் என்ற உணர்வுகளை எண்ணித்தான், நம் முன்னோர்கள் இந்த வழக்கத்தை வைத்து இருக்கிறார்கள். ஆக, அவர்கள் வகுத்த அறிவியல் தத்துவங்கள் பொய்யல்ல என்பதே உண்மை.

காகம் கரைந்தால் வீட்டிற்கு விருந்தினர் வருவார்கள் என்பது உண்மைதானா?

🐦 நாம் தினமும் காணும் பறவைகளில் காகமும் ஒன்று. நமது இறந்த முன்னோரின் அம்சமாக காகங்கள் திகழ்கிறது. எனவே நமது முன்னோர்களின் நினைவு நாட்களில் காகத்துக்கு அன்னம் இடுவது சிறப்பாக கருதப்படுகிறது. சகுனம் பார்ப்பதிலும் காகம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இன்றும் காகம் கத்தினால் விருந்தினர்கள் வருவார்கள் என்ற நம்பிக்கை மக்களிடையே பரவலாக நம்பப்பட்டு வருகிறது.
 
🐦 நம் வீட்டில் காகம் கத்தினால், நம் வீட்டிற்கு யாரோ விருந்திற்கு வரப் போகிறார்கள் என்று கூறும் வழக்கம் நம் பழங்காலம் தொட்டு சொல்லப்படுகின்ற வழக்கமாகும்.
 
🐦 நம் கலாச்சாரம் விருந்தோம்பலுக்குப் பெயர் போனது. வீட்டிற்கு வரும் விருந்தினரை மகிழ்ச்சியோடு வரவேற்று அவர்களுக்கு அறுசுவை விருந்து கொடுத்து உபசரிப்பது நம் கலாச்சார வழக்கமாகும்.
 
காகங்களின் சகுனம் :
 
🐦 காகங்களை, நம் முன்னோர்களாகப் பாவித்து அவைகளுக்கு தினமும் சாதம் வைப்பது நம் வீட்டில் இன்றளவும் கடைபிடிக்கப்படுகிறது. நம் வீட்டிற்கு விருந்தினர் வருகையை காகங்கள் எவ்வாறு முன்கூட்டியே அறிகின்றன என்பதை நாம் கவனிக்க வேண்டும்.
 
இதை கவனித்ததுண்டா?
 
🐦 காகம் கத்துவதால் விருந்தினர் வருகிறார்களா? அல்லது விருந்தினர் வந்ததால் காகம் கத்துகிறதா? 
 
காகம் கரைந்தால் விருந்தினர் வருவார்களா?
 
🐦 காகம் கத்தினால் விருந்தினர் வருவார்கள் என்பது விருந்தினர் வந்தால் காகம் கத்தும் என்பதின் சொல் மாற்றமாகும். நாம் விருந்துக்காகப் பரிமாறும் உணவுகளின் மிச்சம் உள்ளதை சாப்பிடுவதற்காகவே காகங்கள் வந்து சேருவது வழக்கம். இதிலிருந்து விருந்தினர் வந்தால் காகம் கத்தும் என்பது மருவி காகம் கத்தினால் விருந்தினர் வருவர் என்றானது.
 
காகங்களிம் குணங்கள்
 
🐦 காகத்திற்கு இரண்டு வகையான குணங்கள் உண்டு. அதாவது காக்காய் ஏதாவது இரையை எலி, மீன், குருவி போன்றவைகளை தானே வேட்டையாடி கொன்றால் அந்த இரையை தான் மட்டுமே உண்ணும். மற்ற காக்கைகளை தன்னுடன் சேர்க்காது. துரத்தி விடும்.
 
🐦 ஆனால் வேறு யாராவது போடும் இரையை தன்னுடன் மற்ற காக்கைகளையும் 'கா கா" என்று கத்தி கூப்பிட்டு கூட்டமாக சேர்ந்து சாப்பிடும் இயல்புடையது.

வீட்டிற்கு வரும் மருமகளை வலது காலை முன்வைத்து வரவேண்டும் என்று சொல்வதேன்?🌞 நம்முடைய முன்னோர்கள் வலதுக்கு மிக முக்கியத்துவம் அளித்து வைத்திருக்கின்றனர். நாம் தூங்கி எழும் போதும், வலது பக்கமாகத் திரும்பி எழ வேண்டும். சாப்பிடும் போதும் வலது கையால் தான் சாப்பிட வேண்டும். வலது கால் வைத்து தான் வீட்டின் உள்ளே நுழைய வேண்டும். இப்படி வலதுக்கே மிக முக்கியத்துவம் கொடுத்து வந்தார்கள்.

🌞 இடது கையால் எதையாவது கொடுத்தாலோ, இடது கையால் சாப்பிட்டாலோ நம் வீட்டிலுள்ள பெரியோர்கள் குழந்தைகளைக் கண்டிப்பதைக் காணலாம். நாம் வலது கையால் செய்யும் எந்த ஒரு செயலும் சுபமாகவே முடியும் என்ற நம்பிக்கையைக் கொண்டிருக்கிறோம்.

🌞 ஒருவர் வீட்டிற்குள் நுழையும் போது வலது காலை முன் வைத்துச் செல்ல வேண்டுமென்பது ஒரு விதிமுறையாகும். இப்படிச் செய்யாமல் இடது காலை முன் வைத்து வீட்டிற்குள் சென்றால் அது அபசகுனமாகும்.

🌞 மனித உடலுக்கு வலது பக்கம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். திருமணங்களிலும் வலது காலை எடுத்து அம்மி மீது வைத்து மெட்டி இடும் வழக்கம் இன்றளவும் உண்டு.

🌞 விஞ்ஞான ரீதியாகவும் சரி, ஆன்மிக ரீதியாகவும் சரி நாம் சிந்தித்துப் பார்த்தால் வலது பக்கத்திற்கு ஓர் அலாதியான சக்தி இருப்பதை உணரலாம்.

🌞 ஒரு மனிதனை சோதனை செய்து பார்த்தால் வலது பக்க நரம்புகளின் செயல்பாடுகள் அனைத்தும் இடது பக்கத்தை விட வீரியமானதாக இருக்கும். அதாவது நாம் வலது பக்கத்தால் செய்யக்கூடிய அனைத்து செயல்களையும் திறம்பட செய்யலாம் என்பது பொருள். நம்முடைய மனநிலையும் வலது பக்கத்தையே சார்ந்து இருக்கின்றது.

🌞 இதனாலேயே நம் வீட்டிற்கு முதன்முதலாக வரும் மருமகள் வலது கால் வைத்து பிரவேசித்தும், அதேபோல வெளியேறுவதும் சுபலட்சணம் என்று நம் முன்னோர்கள் கூறி வந்தனர்.

🌞 நம்முடைய மனையடி சாஸ்திரமும் இதையே தான் கூறுகிறது. படிக்கின்ற குழந்தைகளுக்கும் வலது பக்க மூளையிலேயே ஞாபக சக்தி கூடுதலாக இருக்கும் என்றும் விஞ்ஞானம் கூறுகிறது.

Sunday, 18 March 2018

கோவிலில் நாம் செய்யும் தவறுகள் - திருத்திக்கொள்ள ஒரு வாய்ப்பு !

கோவிலில் வழிபடும் முறைகள் !! 
✴ குளித்து, சுத்தமாக கோவிலுக்கு செல்ல வேண்டும். கோவிலிற்கு வெறுங்கையுடன் செல்லாமல் தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு மற்றும் பூ ஆகியவற்றை வாங்கி செல்ல வேண்டும்.
 
✴ சிவன் கோவிலென்றால் வில்வத்தாலும், பெருமாள் கோவிலென்றால் துளசியாலும் அர்ச்சனை செய்ய வேண்டும். கோபுரத்தை வணங்கிவிட்டே உள்ளே செல்ல வேண்டும்.
 
✴ நமஸ்காரம் செய்யும் போது மேற்கு அல்லது தெற்கில் கால் நீட்டல் வேண்டும். வடக்கிலும், கிழக்கிலும் கால் நீட்டுதல் கூடாது.
 
✴ விநாயகர் சன்னதியில் தலையில் மூன்று முறை கொட்டிக் கொண்டு, 3 தோப்புக் கரணம் போட வேண்டும்.
 
✴ விநாயகரை ஒரு தரமும், சூரியனை 2 தரமும், அம்பாளையும், விஷ்ணுவையும் 4 தரமும், ஆஞ்சநேயரை 5 முறையும் பிரதட்சணம் செய்ய வேண்டும். 
 
✴ மூலவருக்கு அபிஷேகம் நடந்தால், பிரகாரத்தை சுற்றக்கூடாது. அபிஷேகத்தை கண்டால் அலங்காரமும் பார்க்க வேண்டும்.
 
✴ நமது வேண்டுதல்களையெல்லாம் கொடிமரத்தின் அருகே நின்று கேட்க வேண்டும். அதற்கு பிறகு வேறெந்த சன்னதியிலும் சிவன் நாமம், நாராயண நாமம் தவிர வேறெந்த சிந்தனையும் இருக்கக்கூடாது. கோவிலுக்குள் ஒருவருடனும் பேசக்கூடாது.
 
✴ ஆலயத்திற்குள் ஒருவரை ஒருவர் கும்பிடக்கூடாது. ஏனெனில், கும்பிட்டவரின் பாவம் எதிரில் உள்ளவரை சேரும். சனிபகவானை நேருக்கு நேர் நின்று கும்பிடக்கூடாது. 
 
✴ ஆலய வளாகத்திற்குள் அசுத்தம் செய்தல், குப்பையைப் போடுதல் போன்றவற்றை செய்தல் கூடாது.
 
✴ கோவிலிலிருந்து பிரசாதம் தவிர வேறெதையும் எடுத்துச் செல்லக்கூடாது.
 
✴ சண்டிகேசுவரரின் சன்னதியில் நூலை கிழித்துக் போடக் கூடாது. சிவ தியானம் பூர்த்தி செய்யச் சொல்லி அவரிடம் வேண்டிவிட்டு, சிவனுடைய அருளைத் தவிர, வேறெதையும் கொண்டு செல்லவில்லை என்று சண்டிகேசுவரரிடம் தெரிவித்துவிட்டு செல்ல வேண்டும்.
 
✴ சிவன் கோவிலில் காலபைரவரையும், பெருமாள் கோவிலில், சக்கரத்தாழ்வாரையும் வழிபட்டால் செய்வினை தோஷங்கள் அணுகாது.
 
✴ கோவிலுக்கு சென்று விட்டு நேரே வீட்டிற்கு செல்ல வேண்டும். இப்படியெல்லாம் அனுஷ்டித்தால் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்.