Thursday, 22 March 2012

குறையொன்றுமில்லை கோவிந்தா! - திருப்பதிகொட்டும் வருமானம்

* திருப்பதிக்கு ஆண்டுதோறும் வருபவர்களின் எண்ணிக்கை 1.9 கோடி. திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் 50 ஆயிரம் பேரும், சனி, ஞாயிறு மற்றும் பிற விடுமுறை நாட்களில் தினமும் லட்சம் பேரும், பிரம்மோற்ஸவ காலத்தில் 5 லட்சம் பேரும திருப்பதிக்கு வருகின்றனர். இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வரும் தலம் இதுவே.

* இங்கு குவியும் முடி காணிக்கை மூலம் கிடைக்கும் வருமானம் மட்டும் ஆண்டுக்கு ரூ.100 கோடி.

* டிக்கட் விற்பனை மூலமும்
ரூ. 100 கோடி கிடைக்கிறது.

* நன்கொடை வருமானம் மட்டும் ரூ.100 கோடி. இங்கு ஒரு லட்சம் முதல் ஐந்து லட்சம் வரை நன்கொடை அளிப்பவர்கள் குடும்பத்துடன் (ஐந்து பேர்) வந்து வி.ஐ.பி., காட்டேஜ்களில் இலவசமாகத் தங்கி சுவாமியை சிறப்பு தரிசனம் செய்து செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். இவர்களுக்கு ஒரு வஸ்திரமும், ஆறு லட்டுகளும் வழங்கப்படும்.

ஐந்து லட்சம் முதல் பத்துலட்சம் வரை நன்கொடை அளிப்பவர்கள் மூன்று நாட்கள் தங்கி வஸ்திரம், பத்து மகாபிரசாத பாக்கெட், 10 சிறிய லட்டு பெற்றுக் கொள்ளலாம். பத்துலட்சத்துக்கு அதிகமாக நன்கொடை செலுத்துவோர் 5 பேர் கொண்ட குடும்பமாக ஐந்து நாட்கள் தங்கிசுவாமியை வழிபடலாம். அர்ச்சனைக்கு பிறகு நடக்கும் பூஜையை இவர்கள் பார்க்க அனுமதியுண்டு. முதல் தடவை வரும்போது ஐந்து கிராம் தங்க காசு, தங்கமுலாம் பூசிய வெள்ளி பதக்கம் ஆகியவை தரப்படும். ஆண்டுதோறும் பத்து மகாபிரசாதம் பாக்கெட் மற்றும் 20 சிறிய லட்டுகள் வழங்கப்படும். இந்த நன்கொடைக்கு வருமானவரி விலக்கும் <உண்டு.

* திருப்பதியில் காட்டேஜ்கள் கட்டவும் விதிகளின் அடிப்படையில் நன்கொடை வழங்கலாம். இவர்கள் திருப்பதியில் ஆண்டில் 30 நாட்கள் தங்க அனுமதிக்கப்படுவர். ஆனால், ஒரே சமயத்தில் பத்துநாட்களுக்கு மேல் தங்க முடியாது.

* திருப்பதியிலுள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா நூலகம் 1993ல் அமைக்கப்பட்டது. இங்கு 40 ஆயிரம் இந்துமத வரலாற்று நூல்கள் உள்ளன. ஆங்கிலம், இந்தி மொழிகளில் பெரும்பாலான நூல்கள் உள்ள

ஏழுமலையான் வைரக்கிரீடம் - பயோடேட்டா

செய்யப்பட்ட ஆண்டு: 1982-1985.
அப்போதைய மதிப்பு: 5.75 கோடி ரூபாய்.
உயரம்: 2.3 அடி
அடிப்பாகம்: 1.1 அடி
பதிக்கப்பட்டுள்ள வைரக்கற்களின் எண்ணிக்கை: 28,369.
வைரங்கள் வாங்க எடுத்துக் கொள்ளப்பட்ட காலம்: 1982 நவம்பர்- 1983 அக்டோபர்.
வைரக்கற்கள் பொருத்தப்பட எடுத்துக் கொள்ளப்பட்ட காலம்: 24.5.1985- 19.12.85.
பயன்படுத்தப்பட்ட தங்கம்: 26கிலோ. (இது அபரஞ்சி என்னும் மூசுதங்கம். அதாவது மிகச்சுத்தமான தங்கம்)
தயாரித்தவர்கள்: பெங்களூரு சுராஜ்மல் நிறுவத்தினரும், நகை வியாபாரிகளும் கிரீடம் தயார் செய்யும் பணிக்கான செலவை ஏற்றுக்கொண்டனர்.

குறிப்பு: இந்த கிரீடத்தில் பதிக்கப் பட்டுள்ள வைரங்கள் மத்தியஅரசின் அனுமதி யுடன் ரஷ்யாவில் இருந்து வாங்கப்பட்டவை. அதன் மதிப்பு மட்டும் 4கோடியே 30 லட்சம். பெல்ஜியத்தில் ஆண்ட்வெர்ப் என்ற இடத்தில் இவை பட்டை தீட்டப்பட்டன.

திருப்பதி லட்டு

திருப்பதி லட்டை ஒரு காலத்தில் "மனோகரம்' என்று அழைத்தார்கள். தினமும் உத்தேசமாக 6ஆயிரம் கிலோ கடலை மாவு, 12 ஆயிரம் கிலோ சர்க்கரை, 750 கிலோ முந்திரி பருப்பு, 200 கிலோ ஏலக்காய், 500 லிட்டர் நெய், 30 கிலோ எண்ணெய், கற்கண்டு 500 கிலோ, உலர்ந்த முந்திரி 600 கிலோ மற்றும் 50 கிலோ பாதாம் பருப்பு ஆகியவை பயன்படுத்தபடுகின்றன. இந்த பொருட்களுக்கு மட்டும் உத்தேசமாக ரூ. 12லட்சம் செலவாகும். ஒரு லட்டு சராசரி ரூ.10க்கு விற்கப்படுகிறது.

வி.ஐ.பிகளுக்கு கூடுதல் விலையில் லட்டு விற்கப்படுகிறது. தினமும் ஒன்றரை லட்சம் லட்டுகள் விற்பனையாகின்றன.

கடந்த 2006ம் ஆண்டில் லட்டு விற்பனை மூலம் 75 கோடியும், 2007ல் 103 கோடியும், 2009ல் 125 கோடியும் வருமானமாக கிடைத்தது. கோயிலுக்குள் தரிசனம் முடித்து வரும் பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாதமாக தரப்படும் லட்டு 100 கிராம் எடையுடையது. இதை கோயிலுக்குள் உள்ள "பொடு' எனப்படும் மடப்பள்ளியிலேயே பாரம்பரியமாக அர்ச்சகர்கள் தயாரித்து வருகின்றனர். கடந்த 300 ஆண்டுகளாக இந்த பணி நடப்பதாக கூறப்படுகிறது. இந்த லட்டை "கல்யாண லட்டு' என்றும் சொல்வார்கள். இது அரை கிலோ எடையுடையது. லட்டு தயாரிப்பு பொருட்களும், தயாரிக்கப்பட்ட லட்டுகளும்கிரேன் மூலமாக வினியோக இடத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.

லட்டு தயாரிப்புக் குரிய வாசனைப் பொருட்கள் கொச்சியில் கொள்முதல் செய்யப்படுகிறது. மற்ற பொருட்கள் ஏல முறையில் வாங்கப்படுகிறது.

No comments:

Post a Comment