Sunday, 1 April 2012

பைரவர் சாமியின் முக்கியத்துவம் என்ன?ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன்: பைரவரை சிவனுடைய ஒரு அம்சமாகத்தான் சொல்லப்பட்டிருக்கிறது. பொதுவாக பைவரர் எல்லைத் தெய்வமாகத்தான் சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது காவல் தெய்வமாக. மூகாம்பிகை கோயில்களுக்குப் போனால் வீரபத்ரசாமிகள் வலப்பக்கத்தில் இருப்பார். அவர் ஒரு எல்லைத் தெய்வம். அம்பாளை வணங்கிவிட்டு வரும்போது காவல் தெய்வமான வீரபத்ரசாமியை வணங்குவார்கள். அதேபோல, பழமையான சிவலாயங்களிலெல்லாம் நோக்கினால் பைரவர் இருப்பார். நாய் வாகனத்துடன் நின்ற கோலம், வதுவான கோலத்தில்தான் இருப்பார். இது என்னவென்றால், காவலாக இருப்பேன் என்பதைச் சொல்கிறது.

சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூர் என்று ஒரு ஊர் இருக்கிறது. அங்கு சென்றால் பைரவர் அமர்ந்த கோலத்தில் தவக்கோலத்தில் இருப்பார். எல்லா இடங்களிலும் இருப்பவர் வேறு, இங்கு இருக்கும் பைரவர் வேறு. இது மிகவும் சிறப்பு வாய்ந்தது. இவரை சூரியனுடைய அம்சமாகவும் சொல்வார்கள். அவரிடம் சென்று உட்கார்ந்து சூரிய காயத்ரி சொன்னால் உங்களுடைய உடல் சூடு அதிகரிப்பதைப் பார்க்கலாம். காய்ச்சல் வந்தது போல் 102, 103 டிகிரியில் இருக்கும். வேண்டுமானால் சோதித்துப் பார்த்துக்கொள்ளலாம். இங்குதான் அமர்ந்த கோலத்தில், தியானக் கோலத்தில் இருப்பார். அதன்பிறகு, அந்தப் பகுதிகளில் நிறைய பைவரர்கள் உண்டு. வீரபாண்டிய கட்டபொம்மன் பைரவர் வழிப்பாட்டில் தீவிரமாக இருந்திருக்கிறார்.

தவிர, சொர்னாதர்ஷன பைவரர் என்று பைரவர் இருக்கிறார். கையில் கலசத்துடன், துணையுடன் - அம்பாளுடன் - இருப்பார். ரஜினிகாந்த் கூட இங்கு இருக்கும் சொர்னாதர்ஷன பைரவரைச் சென்று வணங்கியிருக்கிறார். திருப்புலிவனம் என்ற ஊர் காஞ்சிபுரத்திற்குப் பக்கத்தில் இருக்கிறது. இங்கு தட்சணாமூர்த்தி சிங்க வாகனத்திலும், புலி வாகனத்திலும் இருப்பார். இங்குதான் சொர்னாதர்ஷன பைரவரும் இருக்கிறார். வைணவத்தில் லட்சுமியையும், பெருமாளையும் வணங்கினால் பணம், காசு வரும் என்று சொல்வது போல, சைவத்தில் சொர்னாதர்ஷன பைரவர்தான் தன சாஸ்திரத்திற்கு உரியவர். அதனால்தான் சொர்னாதர்ஷன பைரவரை வணங்குவார்கள்.

செட்டி நாட்டுக்காரர்கள் பொதுவாக பைரவர் வழிபாடு அதிகமாகச் செய்வார்கள். காத்து, கருப்பு அண்டாமல் இருப்பது. போட்டி பொறாமை, வயிற்றெறிச்சலால் வரக்கூடியதை கழிக்கக்கூடியதும் பைரவருக்கு உண்டு. அந்தக் காலத்தில் வழித்துணைக்கு பைரவரை வணங்கிவிட்டுத்தான் எல்லோரும் கிளம்புவார்கள். ஏனென்றால், அப்பொழுதெல்லாம் மாட்டு வண்டிப் பயணம், நள்ளிரவுப் பயணமெல்லாம் அதிகம் இருக்கும். அதற்காக அதுபோலச் செய்வார்கள். தேங்காயை உடைத்து கண் இருக்கும் முடியை எடுத்து அதில் ஐந்து விதமான எண்ணெய்களை விட்டு அதில் திரிபோட்டு விளக்கேற்றுவார்கள். இதுபோல பைரவருக்குச் செய்யும் போது, ஏழரைச் சனியால், அஷ்டமச் சனியால் ஏற்படக்கூடிய தோஷம் எல்லாம் விலகும் என்று சொல்வார்கள். ஆகமொத்தத்தில் பைரவர் என்பவர் விசேஷமானவர்.

இதுதவிர, ஜுர பைரவர் என்றெல்லாம் இருக்கிறார். ஜுரம் வந்தால் அவரை வணங்கிவிட்டு வந்தால் ஜுரம் போய்விடும். நிறைய பாடல் பெற்ற தலங்களில், பண்ருட்டி பக்கத்தில் திருவதிகை என்று ஒரு ஊர் இருக்கிறது. வீரதானேஸ்வரம் அது. அங்கு ஒரு பைரவர் இருக்கிறார். இப்படி ஒவ்வொரு நோய்க்கும் ஒவ்வொரு பைரவர் என்றெல்லாம் சொல்லப்பட்டிருக்கிறது. இதுபோல பைரவரை வணங்கும் போது நோய் விலகும், எதிர்மறை எண்ணங்கள் விலகும்.

ஒரு பையனும் அம்மாவும் வந்திருந்தார்கள். சோழி போட்டுப் பார்த்தேன். அதில் 8 வந்தது. 8 வந்தால் மரண பயத்தை தரக்கூடிய எண் என்று அர்த்தம். திசையும் சனி திசை. சனி ஆயுளுக்கு உரிய கிரகம். சனி 2ல் இருக்கிறார். அந்த திசை நடந்து கொண்டிருக்கிறது. பையன் (Electrical and Electronics Engineering - EEE) 4வது வருடம் படித்துக் கொண்டிருக்கிறார். பையனைப் பார்த்தாலும் நன்றாகத்தான் இருக்கிறார். அவர்களிடம் சொன்னேன், கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும், எதிர்மறை எண்ணங்கள் தோன்றும், ஆயுள் பயமெல்லாம் கொடுக்கும் என்று சொல்லி முடித்ததும், அந்தப் பையன் சொல்கிறான், எப்பொழுது பார்த்தாலும் நான் இறந்துவிடுவேனோ என்ற பயம் இருக்கிறது என்று சொன்னார்.

இதுபோல, சனியால், ஏழரைச் சனியால், அஷ்டமச் சனியால் ஏற்படக்கூடிய இடர்பாடுகளுக்கு பைரவர் வழிபாடு தைரியத்தையும், எதிர்மறை எண்ணங்களை முழுமையாக வேரறுக்கக்கூடியவர் பைரவர். அதனால் பைரவரை வணங்கும் போது எல்லா வகையான சக்தியும் கிடைக்கும்.

உடலமை‌ப்பு, முக அழ‌கி‌ற்கான ஜோ‌திட‌ம்!ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன்: சாதாரணமாக உடலாதிபதி என்பவர் சந்திரன்தான். அவர்தான் தோற்றங்களுக்குரிய கிரகம். தோற்ற அமைப்பிற்கு உரிய கிரகம். உதாரணத்திற்கு சுக்ரன் நன்றாக இருக்கிறாரென்றால், ஒருவிதமான காந்தமான கண்கள், கணிவான கண்கள். அவர்கள் சும்மா போய்க் கொண்டிருந்தால் கூட, என்ன சார்? நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்று பேச வைக்கக் கூடியவர்கள். அந்த மாதிரியான கண்களெல்லாம் சுக்ரன் நன்றாக இருந்தாரென்றால் அந்த ஒளி அவர்களிடம் இருக்கும். அவர்களெல்லாம் பெரிதாக ஒன்றும் நம்மிடம் பேச வேண்டும் என்று அவசியமே இருக்காது. சும்மா அப்படி பார்த்து கண் சிமிட்டினாலே போதும் நாம் விழுந்துவிடுவோம். அந்த மாதிரியெல்லாம் இருப்பார்கள்.

சந்திரனும் அதேபோல வலுவாக இருக்க வேண்டும். சந்திரன்தான் முகத் தோற்றம், முகப்பொலிவு, அந்த உருண்டை முகம், அந்த முகத்திற்கு தகுந்த மாதிரி மூக்கு, கண், காது எல்லாம் செதுக்கி வைத்திருக்கிறது என்று சொல்வார்களே, அதெல்லாம் சந்திரன்தான். லக்னாதிபதி, உதாரணத்திற்கு மேஷ லக்னம் என்றால் அதிகமான உயரமாக இருக்க மாட்டார்கள். சராசரி உயரம், பருத்த தேகம் அல்ல. ஒல்லியாகவும் இல்லாமல் உயரத்திற்கு ஏற்ற சதைப்பிடிப்புடன் இருப்பார்கள். இதுபோல அங்க லட்சணங்கள் ஒவ்வொரு நட்சத்திர ராசிக்கும் சொல்லப்பட்டிருக்கிறது. அவர்கள் அதுபோலத்தான் இருப்பார்கள். ரிஷப ராசிக்காரர்கள் என்றால் சராசரி உயரம், அதற்கும் மேலாக இருப்பார்கள்.

மிதுனம், கன்னி இதெல்லாம் புதன் ராசி. இவர்களுக்கு மூக்கின் நுனி கொஞ்சம் உருண்டையாக இருக்கும். குறிப்பாக கன்னி ராசிக்காரர்களுக்கு மிளகாய் மூக்கு இருப்பதையெல்லாம் பார்க்கிறோம். இதற்கடுத்து துலாம், சிம்மம், மகரம் ராசிக்கார்களைப் பார்த்தீர்களென்றால், மூக்கு நீளமாக இருக்கும். தனுசு, மீனம் ராசிக்காரர்களுக்கு புட்டபருத்தி பாபாவிற்கு பதுங்கி, ஒரு மாதிரி மடிந்து, அதாவது ஊர் பக்கத்திலெல்லாம் பெருமாள் மூக்கு என்று சொல்வார்கள் அந்த மாதிரி இருக்கும்.

மூக்கு பற்றி ஏன் அதிகமாகச் சொல்கிறேன் என்றால், நாசிதான் சாமுத்திரிகா லட்சணத்தில் பிரதானம். நாசி, கண்கள், நெற்றி அமைப்பு. நெற்றியில் இருக்கும் கோடுகளையெல்லாம் வைத்து சில விஷயங்களைச் சொல்லலாம்.

ஏனென்றால் சனி லக்னத்தையோ, ராசியையோ பார்க்கிறதென்றால் கோடுகள் நெற்றியில் வர ஆரம்பித்துவிடும். இதுபோன்ற சில விஷயங்கள் உண்டு. அடுத்து புதன் ஒருவருக்கு வலுவாக இருந்தால் மெல்லிய விரல்கள் நீளமான விரல்கள் இருக்கும். அவருடைய கையைப் பார்க்கும் போதே சொல்லிவிடலாம், புதன் உச்சமாக இருக்கிறார் அவர் ஜாதகத்தில் என்று.

இதுபோன்று கிரகங்கள் பல விஷயங்களில் அங்க அவையங்களை ஆட்சி செய்கிறது. என்னுடைய தாத்தா ஒரு குழந்தையுடைய பிறந்த தேதியைக் கொடுத்தால் தாயின் கர்ப்பத்தில் இருந்தபோது என்னென்ன கிரக அமைப்பில் இருந்திருக்கிறது என்று பார்ப்பார். கர்ப்பம் உருவாகி, திரவ நிலையிலிருந்து திட நிலையில் உருவாகி செல் பிரிகிறதே, மைட்டாசிஸ், மையாசிஸ் அந்த நிலையில் இருந்து அவர் பார்ப்பார். சில மாதங்கள் சில அவயங்கள் சிக்கலாகும் போது, 5வது மாதம் குழந்தை கர்ப்பத்தில் இருக்கும் போது தாய்க்கு செவ்வாய் இருந்தது. அதனால் 5வது மாதத்தில் இவர்களுக்கு இந்தப் பிரச்சனை உருவாகியிருக்கும். இந்த மாதிரியெல்லாம் சிலவற்றை கண்டறிவார்கள்.

தற்பொழுது ஸ்கேன் எல்லாம் வந்துவிட்டது. கருவில் இருக்கும் குழந்தையைப் பார்க்கிறார்கள். ஆனால், அப்பொழுதே பக்க விளைவுகள் இல்லாமல் இதுபோன்று பார்த்திருக்கிறார்கள்.

பொருத்தம் பார்ப்பதில் நட்சத்திரமும், ஜாதகமும்ஜோதிரத்னமுனைவர் க.ப.வித்யாதரன்: நட்சத்திரமஎன்பதஎன்ன? ஒரமனிதனஅறிமுகமசெய்வதநட்சத்திரம். இந்உலகத்திற்கநானஇந்நட்சத்திமண்டலத்திலஇருந்தவந்துள்ளேனஎன்றஉரைப்பதஒருவருடைநட்சத்திரம். கோவில்களிலஅர்ச்சனசெய்யும்போதகூட, உங்களுடைசாதி என்என்றகேட்கப்படுவதில்லை, என்நட்சத்திரமஎன்றுதானகேட்கப்படுகிறது. ஏனெனிலஅதுவஒருவருடைவிலாசம், அதாவதநானஇந்நட்சத்திமண்டலத்திலஇருந்தவந்துள்ளேனஎன்றகூறுகிறோம். அதனால்தானபெயரைசசொல்லி, நட்சத்திரத்தசொல்கிறோம். எனவநம்மஇனங்கண்டறிவதநட்சத்திரம்தான்.

எனவதிருமணத்திற்கமுதலிலநட்சத்திரபபொருத்தமபார்க்கிறோம். நட்சத்திரத்தமுடித்பின்னர், மீதமுள்ஒன்பதஇடங்களையுமபார்க்வேண்டும், அதற்கஜாதகத்தபுரட்டுகிறோம். நட்சத்திரபபொருத்தமஎன்பதஒரதொடக்கம். அப்போதெல்லாம், எனததாத்தகாலத்தில் 21 பொருத்தங்களபார்ப்பார்கள், அவரஅப்படித்தானபார்த்தமணபபொருத்தமசெய்தார். அதனபிறகஎனததந்தையாரஅதனை 15 பொருத்தங்களாமாற்றினார். இப்போது 10 ஆகியுள்ளது.

இதையெல்லாவற்றையுமதாண்டி இப்போதநானபார்ப்பதகுறிப்பாஐந்தபொருத்தங்களைத்தான். தினபபொருத்தம், கனபபொருத்தம், யோனி பொருத்தம், ராசிபபொருத்தம், ரஜ்ஜூபபொருத்தமஆகியன. இந்ஐந்தும்தானஅடிப்படையானது. இதனஅடிப்படையில்தானமற்பொருத்தங்களஎல்லாமபார்க்கப்படுகிறது. எனவநட்சத்திரபபொருத்தத்தைபபார்த்துவிட்டஜாதகபபொருத்தத்தைபபார்க்காமலஇருந்துவிடலாகாது. 10 பொருத்தங்களபார்த்ததிருமணமசெய்துவைத்பத்தாவதநாளிலேயடைவர்ஸசெய்தகொண்டவர்களையெல்லாமபார்க்கிறோம்.

த‌ற்கு காரணமஎன்ன? கிரகங்களையுமபார்க்வேண்டும். கிரகங்களஎன்றசொன்னாலஅந்கிரகங்களஎந்நட்சத்திரத்திலஇருக்கிறதஎன்றபார்க்வேண்டும். தினபபொருத்தமஎன்பதஎன்ன? தினந்தோறுமஇவர்களிடையநடைபெறுமசம்பாஷனைகள், அதாவதஉரையாடல்கள். கணவனஒரகேள்வி கேட்டால், அதற்கமனைவி சொல்லுமபதிலும், மனைவி ஒரகேள்வி கேட்டாலஅதற்ககணவனசொல்லுமபதிலுமமுக்கியமானது. அப்படிககேட்கும்போதபாந்தமாஒருவருக்கஒருவரபதிலகூவேண்டும்.

உதாரணத்திற்கு, தாகமாஇருக்கிறது, தண்ணீரகொடேனஎன்றகணவரகேட்க, அதற்கமனைவி, அதஅங்ககுடமஇருக்கிறது, சொம்பஇருக்கிறது, எடுத்துககுடிக்வேண்டியதுதானே? என்றசொன்னாலஎன்ஆவது? அதநேரத்தில், இருங்க, இதகொண்டவருகிறேனஎன்றசொல்வதஎப்படியிருக்கிறது? அதாவதஇந்உரையாடலஉள்ளிட்ஒவ்வொரபரிமாறலிலுமஅன்னியோன்யமஇருக்வேண்டும். இதைககாண்பதுதானதினபபொருத்தமஎன்பது.

தினபபொருத்தமஇருந்தும், லக்னத்தினஇரண்டாவதவீட்டில் 6க்கஉரியவர், 8க்கஉரியவரஇருந்தால், அவர்களஇருவருமபேசிக்கொள்வதஒரமுரண்பாடாஇருக்கும். அதாவதகணவரகேட்பதஒன்றாகும், மனைவி கூறுமபதிலவேறாகவுமஇருக்கும். அதஎரிச்சலூட்டும். எனவேதானஜாதபொருத்தமஎன்பதமிகுந்அவசியமாகிறது.

இன்னுமகூறப்போனால், நட்சத்திரபபொருத்தமஎன்பதஅவர்களஇருவரமட்டுமசார்ந்தது, ஆனால், ஜாதகபபொருத்தமஎன்பதஅவர்களுடைஉறவுகளநிலபற்றி உரைக்கககூடியது. மாமனார், மாமியார், நாத்தனாரபோன்றவர்களோடஅனுசரித்துபபோவார்களஎன்பதைககண்டறிஜாதகபபொருத்தமபார்ப்பதஅவசியம். எனவஇந்இரண்டிற்குமநாமமுக்கியத்துவமகொடுத்துபபார்க்வேண்டும்.