Friday, 17 October 2014

வாசலில் கோலம் போடுவதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா....

வீட்டைக் கூட்டி சுற்றுபுறத்தை அழகுபடுத்தி வாசலில் கோலமிடும் பண்பாடு நாள் தோறும் இடம் பெறுவது நம்ம தமிழ் நாட்டில் தான்!கோலமிடும் வீட்டில் மகாலெஷ்மி நிரந்தர வாசம் செய்கிறாள் என்பது ஐதீகம். 

வீட்டில் இருந்து யாரேனும் வெளியே கிளம்பும் முன்பாக கோலமிட வேண்டும்.

கோலத்தில் புள்ளி,கோடு போன்றவை போடும் போது சிறு தவறு ஏற்படும் போது காலினால் அழிக்க கூடாது. கையால் அழிக்க வேண்டும். 

வீட்டின் வெளிமுற்றம், சமையல் அறை, பசுவின் கொட்டகை, துளசிமாடம், பூஜை அறை இவற்றில் கோலமிட வேண்டும். 

அதிகாலையில் அரிசி மாவினால் கோலமிடும் போது எறும்பு போன்ற சிறு உயிரிகளின் பசியைப் போக்கிய புண்ணியம் கிடைக்கும். 

அதேபோல அமர்ந்தவாறும் கோலம் போடுதல் கூடாது. வேலையாட்கலை வைத்தும் கோலம் போடுதல் கூடாது.

சுபகாரியங்களின் போது இரண்டைக்கோடு வருவது போலவும் அசுபகாரியங்களின் போது ஒற்றைக்கோடு வருவது போல் போட வேண்டும்.

கோலமிடுவதால் ஏற்படும் நன்மைகள் :

தமிழர்கள் இயற்கையை அரவணைத்து வாழக்கூடியவர்கள். இந்த பூமியின் மண்ணின் தன்மை கெடாமல் இருப்பதற்காக நாம் பசு சாணத்தைத் தெளிக்கிறோம். 

பசு சாணத்தால் ஆன ஈரம், ஓசோன் வாயுப் படலம் சூழ்ந்திருக்கக்கூடிய சூரிய உதயத்திற்கு முன் இருக்கக் கூடிய காலகட்டத்தில் வாசல் தெளித்து பெருக்கும் போது பிராண வாயு, அதாவது முழுமையான ஆக்ஸிஜன், சுத்தமான ஆக்ஸிஜன் நமக்கு கிடைக்கிறது. 

மேலும் குணிந்து பெருக்குதல், குணிந்து கோலமிடுதல் இதெல்லாம் யோகாசனத்தில் ஒரு நிலையாக வருகிறது. இடுப்புப் பகுதியை வளைத்து, கழுத்தை வளைத்து, குனிந்து கரங்களால் மாவை எடுத்து கோலமிடுதல் என்பது யோகாசன அடிப்படையில் ஆரோக்கியமான சூழலைச் தரக்கூடியது. 

பசு சாணத்தாலோ, தண்ணீராலோ தெளிக்கும் போது வாசலில் இருக்கும் கிருமிகள் விலகுகிறது. இதனாலும் ஆரோக்கியமான சூழல் உருவாகிறது. 

நமது இல்லத்திற்கு தினசரி தேவர்கள், லட்சுமி வருவதாக ஐதீகம் இருக்கிறது. 

பச்சரிசி மாவு இடித்து அதில் கோலமிடும் போது நம்முடைய தயாள குணம் வெளிப்படும் விதமாக, எறும்பு, ஈ எல்லாம் சாப்பிடுவதற்கு தானம், தர்மம் செய்வது மாதிரியானதும் இருக்கிறது. அதனால் கோலமிடுதல் என்பது ஒரு சடங்கு சம்பிரதாயம் எல்லாம் கிடையாது. 

நம்ம வீட்டை நல்ல முறையில் அலங்கரித்தல் மற்றும் வரவேற்றல், உபசரிக்கும் குணம் மேலும் மங்களகரமாக இருக்கிறது என்பதற்காகவும் போடப்படுகிறது.

தற்கால விஞ்ஞானிகளால் இன்று கண்டுபிடிக்கப்படும் இயற்கை ரகசியங்களை, அன்று கருவி, ஆராய்ச்சிக்கூடம் இன்றி சித்தர்கள் எவ்வாறு உணர்ந்தார்கள் ??

இன்றுவரை கண்ட விஞ்ஞானம் அனைத்தும் மனித உடலுக்குள் நடைபெறும் அதிசயங்களுக்கு அப்பாற்பட்டதல்ல. சுத்தவெளியிலிருந்து பரமாணுக்கள் தோன்றின.

பரமாணுக்கள் சேர்க்கையால் பஞ்சபூதங்கள் ஏற்பட்டன. நிலம், நீர், நெருப்பு, காற்று என்ற நான்கு பூதங்களுடன் விண் என்ற ஐந்தாவது பூதமான உயிர்ச்சக்தி சுழலும்பொழுது, அதன் தடை உணர்தலாக உணர்ச்சிநிலை பெற்று, ஓரறிவு முதற்கொண்டு தொடங்கிய பரிணாமத்தின் உச்சமாக வந்த ஆறறிவு பெற்றவன் தான் மனிதன்.

இந்த மனித உடலிலே, உயிர், ஜீவகாந்தம், மனம் என்ற நான்கும் சேர்ந்து இயங்கும் போது ஏற்படக்கூடிய ரசாயன இயக்கம், மின்சார இயக்கம், காந்த இயக்கம் இவற்றை கடந்து இப்பிரபஞ்சம் முழுவதும் நடைபெறக்கூடிய இயக்கங்கள் வேறெதுவும் இல்லை.

இந்த உடலில் நடைபெறாத இரகசியத்தை இதுவரை எந்த விஞ்ஞானமும் கண்டுபிடிக்கவில்லை. கண்டுபிடிக்கவும் இயலாது.

அத்தகைய முறையில் பரிணாமத்தின் உச்சமாக உள்ள மனித உடலின் அற்புதமான அமைப்பையும், இயக்கத்தையும் அகத்தவச்சாதனையால் அறிந்தவர்கள் சித்தர்கள். “இந்த உடலிலுள்ள அணுக்கள், பேரணுக்கள், செல்கள் இவைகள் எவ்வாறு அடுக்கப்பட்டும், சேர்த்துப்பிடித்துக்கொள்ளப்பட்டும் இருக்கின்றன” என்பதையெல்லாம் அறிந்தவர்கள் சித்தர்கள்.

அப்படி செல்களாலான கட்டிடமாகிய உடலின் கட்டுமானத்திற்கும், கட்டுக்கோப்புக்கும், உறுதிக்கும், நீடிப்புக்கும் வேண்டிய காந்த சக்தியை எவ்வாறு பெற்று, எவ்வாறு அதை மின் சக்தியாக மாற்றி, ஆங்காங்கே பல ரசாயனங்களை தோற்றுவித்து இயக்கநியதியோடு உடல் என்ற அற்புதமான நிலையம் இயங்குகின்றது என்பதையெல்லாம் அறிந்தவர்கள் சித்தர்கள்.

“மனித உடலின் இயக்கங்களையெல்லாம் உணர்ந்துகொள்வதோடு, பிற உயிரில் ஏற்படும் இன்ப துன்பங்களையும், பிற பொருட்களின் இயக்கங்களையும் கூட அறிவு எவ்வாறு உள்நுழைந்து அறிந்து வருகிறது” என்றும் சிந்தித்துப்பார்த்தார்கள்.

ஒவ்வொரு பொருளிலிருந்தும் வருகின்ற அலைகள் மோதுதல், பிரதிபலித்தல்,சிதறுதல், ஊடுறுவுதல், இரண்டினிடையே முன் பின்னாக ஓடுதல் என்ற ஐந்து தன்மைகளைப் பெறுகின்றன. என்பதை சித்தர்கள் உணர்ந்தார்கள்.

இந்த அலைகள் பஞ்ச பூதங்களாலான பருப்பொருட்களில் மோதும்போது அழுத்தம், ஒலி. ஒளி, சுவை, மணம் அத்துடன் மனித உடலிலே புலன் கடந்த நிலையில் மனமாகவும் மார்ச்சி பெறுகின்றன என்பதையும் தங்கள் தவ வலிமையால் உணர்ந்துகொண்டார்கள்.

அந்த விரிந்த மனநிலையிலே பிரபஞ்ச உற்பத்தி இரகசியங்கள் எல்லாம் அவர்கள் உள்ளத்திலே நிறைந்திருக்கும்.

எல்லா வினாக்களுக்குமான விடைகளும் அவர்களுக்குள்ளாகவே இருக்கின்றன. எனவே அங்கிருந்தே தங்கள் உள் நோக்கால் எடுத்துக்கொண்டார்கள். சித்தர்களுக்கு தனியாக ஆராய்ச்சி சாலை எதுவும் தேவையில்லை.

ஆராய்ச்சி சாலை என்று வைத்தால் ஏதாவது ஒரு பொருளைப் பற்றித்தான் ஆராய இடமிருக்கிறது. இந்த உடலையே எடுத்துக்கொண்டு ஆராய்ந்தால் பிரபஞ்சத்தில் உள்ள எல்லா ரகசியங்களையும் பற்றி ஆராய முடியும்.

அந்த முறையில் உடல் விஞ்ஞானத்தை அறிந்தவர்கள் சித்தர்கள். நீங்களும் முயன்றால் ஒரு சித்தராக சிறப்புறலாம். அத்தகைய ஆற்றல் மனிதனாகப் பிறந்த எல்லோரிடத்திலுமே அடங்கியுள்ளது.

வாழ்க வளமுடன்

-வேதாத்திரி மகரிஷி